இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகரை சந்தித்த தமிழ் அரசியல் பிரதிநிதிகள்!

Date:

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலை கிழக்கு மாகாண ஆளுநரும் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவருமான செந்தில் தொண்டமான், அமைச்சரும் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் பொதுச் செயலாளருமான ஜீவன் தொண்டமான், பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தவிசாளருமான மருதபாண்டி ராமேஸ்வரன், கல்வி இராஜாங்க அமைச்சர் அரவிந்த குமார், தொழில் இராஜாங்க அமைச்சரும் ஐக்கிய தோட்ட தொழிலாளர் சங்கத்தின் தலைவருமான வடிவேல் சுரேஷ் ஆகியோர் மரியாதை நிமித்தமாக கொழும்பில் சந்தித்து கலந்துரையாடினர்.

இச்சந்திப்பின் போது இலங்கை மற்றும் இந்தியாவிற்கு இடையிலான உறவை வலுப்படுத்துதல் மற்றும் சமூக பொருளாதார விடயங்களை மேம்படுத்துவது குறித்து கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுக்கு ஆளுநர் செந்தில் தொண்டமானால் நினைவு சின்னம் ஒன்றும் வழங்கி வைக்கப்பட்டது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

வெளியானது வெட்டுப்புள்ளி

2025 ஆம் ஆண்டு நடைபெற்ற தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சைப்...

இந்திய துணை ஜனாதிபதியுடன் செந்தில் தொண்டமான் சந்திப்பு!

இந்திய துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணனை இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான்...

இன்று நுகேகொடையில் பாரிய பேரணி

பல அரசியல் கட்சிகள் இணைந்து ஏற்பாடு செய்துள்ள எதிர்ப்பு பேரணி இன்று...

40 மில்லியன் மதிப்புள்ள “குஷ்” போதைப்பொருள் கடத்திய மூவர் கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் அனைத்து சோதனைகளையும் முடித்துவிட்டு, விமான நிலையத்திற்கு வெளியே...