முன்னாள் நிதியமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ரவி கருணாநாயக்கவின் நாடாளுமன்ற வீதியில் அமைந்துள்ள வீட்டிற்கு இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவின் அதிகாரிகள் குழுவொன்று சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவின் முன்னிலையில் ஆஜராகுமாறு அவருக்கு அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், அந்த அறிவுறுத்தலின்படி அவர் ஆஜராகவில்லை என கூறப்படுகிறது.
இதன் காரணமாக, அந்த ஆணைக்குழுவின் அதிகாரிகள் குழுவொன்று இன்று (29) முற்பகல் அவரது வீட்டிற்குச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
