தருமபுர ஆதீன 27வது குருமகா சந்நிதானம் முதல் முறையாக சிவபூமிக்கு வருகிறார்

0
351

தருமபுர ஆதீன 27வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிகர் ஞானசம்பந்த பரமாச்சாரி சுவாமிகள் முதல் முறையாக சிவபூமியான இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.

இலங்கை வரும் சுவாமிகள் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 12ம் திகதி செவ்வாய்க்கிழமை மதியம் திருக்கேதீச்சர ஆலயத்திற்கு எழுந்தருளுகிறார்.

அன்றைய தினம் மதியம் 1.30 மணிக்கு திருக்கேதீச்சரத்தில் அமைந்துள்ள திருமதி கைலாசபிள்ளை அபிராமி இல்லத்தில் அவருக்கு வரவேற்பு அளிக்கப்படுகிறது.

மகேஸ்வர பூஜையின் பின் மாலை 4.30 மணிக்கு திருக்கேதீச்சர பெருமானுக்கு நடைபெறவுள்ள பிரதோஷ விழாவில் சுவாமிகள் கலந்து கொண்டு அருள்பாலிக்கிறார்.

இதில் பங்கேற்று அருள்பெற பக்தர்கள் அழைக்கப்படுகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here