54 வீதமான இளைஞர்களின் ஆதரவு அனுரவுக்கு – வெளியானது புதிய கருத்துக் கணிப்பு

Date:

18 முதல் 29 வயதுக்குட்பட்ட இலங்கையர்களில் 54 வீதமானவர்கள் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் அனுரகுமார திசாநாயக்காவிற்கு ஆதரவளிப்பது கருத்துக்கணிப்பொன்றின் மூலம் தெரியவந்துள்ளதாக

இன்ஸ்டியுட் ஒவ் ஹெல்த் பொலிசி மேற்கொண்ட கருத்துகணிப்பின் மூலம் இது தெரியவந்துள்ளது.

ஜூன், ஜூலை மாதம் மேற்கொள்ளப்பட்ட கருத்துக்கணிப்புகளில் 18 முதல் 29 வயதுக்குட்பட்டவர்களில் அனுரகுமார திசநாயக்கவிற்கு54 வீதமானவர்களும்,சஜித் பிரேமதாசவிற்கு 35 வீதமானவர்களும், ரணில் விக்கிரமசிங்கவிற்கு 9 வீதமானவர்களும் ஆதரவு வெளியிட்டுள்ளனர்.

கருத்துக்கணிப்பில் கலந்துகொண்ட 30 முதல் 59 வயதிற்கு உட்பட்டவர்களில் 38 வீதமானவர்கள் சஜித் பிரேமதாசவிற்கும்,37 வீதமானவர்கள் அனுரகுமாரதிசநாயக்கவிற்கும்,22 வீதமானவர்கள் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் ஆதரவை வெளியிட்டுள்ளனர்.

60 வயதிற்கு மேற்பட்டவர்களில் 38 வீதமானவர்கள் சஜித்பிரேமதாசவிற்கும், ரணில்விக்கிரமசிங்கவிற்கும் ஆதரவை வெளியிட்டுள்ள அதேவேளை 16 வீதமானவர்கள் அனுரகுமாரதிசநாயக்கவிற்கு ஆதரவை வெளியிட்டுள்ளனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நாட்டில் தென்மேற்குப் பருவப் பெயர்ச்சி மழை நிலைமை

நாட்டில் தென்மேற்குப் பருவப் பெயர்ச்சி மழை நிலைமை படிப்படியாகத் தாபிக்கப்பட்டு வருவதாக...

அரசின் புதிய வரிக் கொள்கை ஜனநாயகத்திற்கு விழுந்த கொடிய அடி – எதிர்க்கட்சித் தலைவர்

தற்போதைய அரசு சர்வதேச நாணய நிதியத்தின் இலக்குகளை மீறிச் செல்ல ஆர்வம்...

நாட்டில் இன்றும் மழை

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வட மாகாணங்களிலும் காலி மற்றும்...

டொலர் உயர்வுக்கும் அரசுக்கும் தொடர்பில்லை

தற்போது இலங்கையில் அமெரிக்க டாலரின் மதிப்பு உயர்ந்து வருவது, அரசாங்க நிர்வாகத்...