இடைக்கால வரவு செலவுத் திட்ட விவாதத்தின் மீதான பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் உதயகுமார் ஆற்றிய உரை வருமாறு,
ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு’ என்ற பழமொழியை நினைவுபடுத்துவதுடன் நாட்டுக்குத் தேவையான இத்தருணத்தில் ஒற்றுமையை வலியுறுத்தி இடைக்கால வரவு செலவுத் திட்ட விவாதத்தின் மீதான எனது உரையை ஆரம்பிக்கிறேன்.
‘சிலந்தி வலையில் சிக்கிய பூச்சி போல’ நம் நாடு கடன் வலையில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறது. நாட்டின் பொருளாதாரம் மீட்க முடியாத அளவிற்கு படுபாதாளத்தில் விழுந்துள்ளது. கடனை மீள செலுத்த முடியாது என அறிவித்ததன் மூலம் சர்வதேச நிதி நிறுவனங்கள் பலவும் நமது நாட்டை தர இறக்கம் செய்துள்ளன. இது சர்வதேச அளவில் நமக்கு ஏற்பட்டுள்ள அவமானமாகும்.
நாட்டுக்கு இவ்வாறு அவமானம் ஏற்பட என்ன காரணம், யார் காரணம் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. குறிப்பாக. கடந்த பொதுத் தேர்தலில் வெற்றியடைந்து, ஆட்சிபீடம் ஏறி பாரளுமன்றத்தில் மூன்றில் இரண்டுபெரும்பான்மை பெற்று, இருபதாவது திருத்தச்சட்த்தின் ஊடாக அதிகாரத்தை அதிகரித்துக்கொண்ட, அரசாங்கம் முன்னெடுத்த தான்தோன்றித்தனமான செயற்பாடுகளே நாட்டின் இன்றைய நிலைமைக்கு முக்கிய – முழு காரணம்.
தமது வியாபார நண்பர்களுக்கு கோடிக் கணக்கில் லாபம் பெற்றுக் கொடுத்து, அதில் பங்குகளை பகிர்ந்து கொண்டதன் காரணமாக, நாட்டுக்கு கிடைக்க வேண்டிய வருமானம் மற்றும் டொலர்களை இழக்க நேரிட்டது. குறிப்பாக, சீனி இறக்குமதி மாபியா, ரெபிட் என்டிஜன் இறக்குமதி மாபியா, தடுப்பூசி இறக்குமதி மாபியா, உர இறக்குமதி மாபியா, எண்ணெய் இறக்குமதி மாபியா போன்ற பல மோசடி வர்த்தக நடவடிக்கைகள் டொலர் இழப்பிற்கு வழிவகுத்தன.
அதுபோல, நாளுக்கு நாள் வரையறை இல்லாமல் பணம் அச்சிட்டு, பணவீக்கத்தை அதிகரித்துநாட்டின் ரூபா பெறுமதியை வீழ்ச்சி அடைய செய்ததுடன், பணம் அச்சிடுவதையே ஒரு வேலையாக செய்து சாதனை படைத்தனர். மேலும், வருமான வரி வரையறை மாற்றம் மற்றும் VAT வரியை8 8 % சதவீதமாக குறைத்ததால் திறைசேரிக்கு வரவிருந்த வருமானம் இழக்கப்பட்டது. ஆட்சி அதிகாரத்தைப் பிடிக்க வெறும் வாக்குகளை மாத்திரம் இழக்காகக் கொண்டு எடுக்கப்பட்ட இந்த தீர்மானத்தால் நாடு பல இழப்புகளை சந்திக்க நேரிட்டது“டொலர் பற்றாக்குறையுடன்” உருவான பொருளாதார நெருக்கடி, இன்று நாட்டு “மக்கள் கழுத்தை இறுக்கிப் பிடித்துள்ளது.
“இரசாயன உர தடையுடன், சேதன பசளை முறையை தீடிரென உடனடியாக அறிமுகப்படுத்தியது வரலாற்று தவறாகும்இந்த நிலையில் ஜனாதிபதி அவர்கள் இடைக்கால வரவு செலவுத் திட்ட யோசனைகளை முன் மொழிந்துள்ளார்.
அந்த யோசனைகளில் பல நல்ல திட்டங்கள் இருப்பதை காணக் கூடியதாக உள்ளது. ஆனால், அவற்றை எவ்வாறு செயற்படுத்தப் போகிறார்? அதற்கான நிதிமூலம் என்ன? முன்மொழிவுகளின் சாத்தியப்பாடு போன்றவை குறித்து பொருளாதார நிபுணர்கள் மத்தியில் சந்தேகம் வலுப்பெற்றுள்ளது.
இவை எல்லாவற்றிற்கும் மேலாக, ‘கள்வர்கள் கூட்டத்தின் நடுவில் ’ நின்றுகொண்டு ஜனாதிபதி எவ்வாறு “பொலிஸ் வேலையை” செய்யப் போகிறார் என்ற ஆர்வமும் அதிகரித்துள்ளது.
“கள்வர்களை கைது செய்து தண்டித்து முன்னோக்கி செல்வாரா? “அல்லது “கள்வர்களை காப்பாற்றி தானும் கரை சேர்வாரா?” என்ற கேள்வி பலர் மத்தியிலும் எழுந்துள்ளது. எது எவ்வாறாயினும் “நாட்டு மக்களுக்கு நன்மை கிடைக்க வேண்டும்” என்ற எதிர்பார்ப்பு எம்மிடம் உள்ளது.
அதற்காக வரவு செலவுத் திட்டத்தில் முன்வைக்கப்பட்டுள்ள நிவாரண அறிவிப்புக்களை நாம் வரவேற்கிறோம். குறிப்பாக, சுய தொழிலை ஊக்குவிக்கும் வகையில் தனியார் பெருந்தோட்ட மற்றும் அரச பெருந்தோட்ட பகுதிகளில் உள்ள வெற்றுக் காணிகளில் விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு திட்டங்களை ஊக்குவிக்கவென முன்வைத்துள்ள திட்டம் சிறப்பானது. இந்த திட்டத்தில் மலையகப் பெருந்தோட்ட பகுதிகளைச் சேர்ந்த இளைஞர் யுவதிகள் அதிகம் உள்வாங்கப்பட்டு அவர்களின் வாழ்வாதாரம் முன்னேற்றப்பட வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.
“காணிப் பகிர்வில் அரசியல் தலையீடுகள் இன்றி, நியாயமான வழிமுறை கையாளப்பட வேண்டும். “ கள்வர்களின் கையில் இந்த பொறுப்பை ஒப்படைக்க வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன்ஊழல் ஒழிப்பு, பொருளாதார மறுசீரமைப்பு, அரச ஊழியர்கள் மறுசீரமைப்பு, முதலீட்டு ஊக்குவிப்பு, வருமான அதிகரிப்பு வழி, அரச சொத்து பராமரிப்பு உள்ளிட்ட பல துறைகளுக்கு குழு நியமிக்கப்படும் என்ற ஜனாதிபதியின் தூர நோக்குடைய திட்டங்களை வரவேற்கும் அதேவேளை, “திருடன் கையில் சாவி சென்றுவிடாமல்” ஜனாதிபதி அவர்களே பார்த்துக் கொள்ள வேண்டும் என சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
கௌரவ சபாநாயகர் அவர்களே இன்று நாட்டில் பணவீக்கம் அதிகரித்து, உணவு பற்றாக்குறை எற்பட்டுள்ளது. பணவீக்கம் 67%, உணவிற்கான பணவீக்கம் 94%நாட்டில் இன்று அத்தியாவசிய பொருட்களின் “விலை வானத்தை நோக்கி நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டு செல்கிறது..கோதுமை மா 350 பாண் 300 முட்டை 60நாட்டில் 10 இல் 7 பேர் அல்லது 70% சதவீதமானேர் தமது உணவு வேலையை குறைந்துள்ளனர் அல்லது உணவின் அளவை குறைத்துள்ளனர்.
இதனால் நாட்டு மக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொள்வதோடு, குறைந்த வருமானம் பெறும் பெருந்தோட்ட மலையக மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். அது மாத்திரமன்றி மின்சார கட்டணம் அதிகரித்து நீர் கட்டணம் அதிகரித்து போக்குவரத்து கட்டணங்கள் அதிகரித்து மக்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. அதனால், அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்வாகன இறக்குமதியில் மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களுக்கு முன்னுரிமை அளிப்பது போன்று மின்சார உற்பத்தி மற்றும் பாவனையில் “காற்றாலை மற்றும் சூரியசக்தி திட்டத்திற்கு முன்னுரிமை” அளிக்கப்பட வேண்டும்.
வரிகளை அதிகரித்து மக்களுக்கு மேலும் சுமைகளை ஏற்படுத்தாது நாட்டு மக்களுக்கு நிவாரணம் வழங்கக்கூடிய வகையில் “நிதியம் ஒன்றை ஏற்படுத்தி, அதற்கு உள்நாட்டு வெளிநாட்டு நிதி மற்றும் இதர உதவிகளை பெற முடியும்” என்ற யோசனையை முன்வைக்கிறேன்.இது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தும என்று எதிர்ப்பார்க்கிறேன்.