தன் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள் மற்றும் விமர்சனங்களை புறந்தள்ளிவிட்டு கண்டி மல்வத்து மஹாநாயக்க தேரரை சந்தித்து கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் ஆசி பெற்றார்.
திருகோணமலை இழுப்பைக்குளம் விகாரை அமைப்பு விடயத்தில் நியாயமாக நடந்து கொண்ட கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் மீது திட்டமிட்ட குழுவினர் அவதூறு பரப்பி வருகின்றனர்.



