இலங்கை தமிழர்கள் சட்டபூர்வமாக இந்தியாவில் தங்க அனுமதி

0
259

இந்தியாவிற்குள் அகதிகளாக நுழைந்த இலங்கை தமிழர்கள் சட்டபூர்வமாக இந்தியாவின் தங்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

இலங்கையில் பொருளாதார நெருக்கடி, போர் காரணமாக இலங்கையை விட்டு வெளியேறிய இலங்கை தமிழர்கள் தமிழ்நாட்டில் பல்வேறு முகாம்களில் தங்கியுள்ளனர்.

இவர்கள் இந்தியாவில் சுதந்திரமாக வாழ வழிவகை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில், 2015 ஆம் ஆண்டு ஜனவரி 9 ஆம் திகதிக்கு முன்பு உரிய ஆவணங்கள் இன்றி இந்தியாவுக்குள் நுழைந்து, அரசிடம் அகதிகளாக பதிவு செய்த இலங்கை தமிழர்கள், சட்டப் பூர்வமாக தங்குவதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

தண்டனை விதிகளில் இருந்தும் இலங்கை தமிழர்களுக்கு மத்திய அரசு விலக்கு அளித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here