செந்தில் தொண்டமான் தொழிலாளர்களுக்கு வழங்கிய உறுதி

Date:

பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள பிரச்சனைக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் நிச்சயம் தீர்வு பெற்று கொடுக்கும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கம் மீது நம்பிக்கை இருப்பதாகவும் அவர் கூறியது போல தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அதனால் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவை அனைவரும் ஆதரிக்க வேண்டும் எனவும் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

பொகவந்தலாவ பிரதேசத்தில் இடம்பெற்ற பிரச்சார கூட்டத்தில் தொழிலாளர்கள் மத்தியில் உரையாற்றிய போது அவர் இதனை தெரிவித்தார்.

பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினையை மாத்திரம் அன்றி அனைத்து ஏனைய பிரச்சினைகளுக்கும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தற்போதைய ஜனாதிபதி ரனில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து தீர்வினை பெற்றுக் கொடுக்கும் என அவர் கூறினார்.

அதனால் மலையக மக்கள் அனைவரும் ஒற்றுமையுடன் கட்டுக்கோப்புடன் இருந்து எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவை வெற்றி பெற செய்ய வேண்டுமென அவர் கேட்டுக் கொண்டார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

எரிபொருள் விலைகளில் மாற்றம்

நேற்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்படவுள்ளன. டீசல்: ரூ.15 அதிகரித்து ரூ.407 சூப்பர்...

பணவீக்கம் 5.5% ஆக உயர்வு

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் (CCPI) அடிப்படையில் கணக்கிடப்படும் வருடாந்த பணவீக்கம்...

பசில் ராஜபக்சவை கைது செய்ய உத்தரவு

2014 ஆம் ஆண்டு ஊவா மாகாண சபை தேர்தல் பிரசாரத்தின் போது...

முக்கிய அமைச்சின் செயலாளர் இராஜினாமா!

போக்குவரத்து, நெடுஞ்சாலை மற்றும் நகர்ப்புற அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில...