ராஜபக்சக்கள் பதவியை விட்டு விலகியது தவறு-சாகர காரியவசம்

0
292

ராஜபக்ச இந்த நாட்டில் ஆட்சிக்கு வந்தது மக்களின் வாக்கு மூலமே தவிர பலத்தால் அல்ல என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

“ராஜபக்சே அந்த பதவிகளை விட்டு விலகியது தவறு என்பதே எனது தனிப்பட்ட கருத்தும், எங்கள் கட்சியின்
பெரும்பான்மையானவர்களின் கருத்தும். இந்த நாட்டில் 69 இலட்சம் மக்கள் வாக்களித்து ஜனாதிபதியை நியமிக்கும் போது, ​​அந்த ஜனாதிபதியை பதவி நீக்கம் செய்யும் உரிமை அந்த 69 இலட்சம் மக்களுக்குரியதேயன்றி வீதியில் இறங்கும் 1 இலட்சம் மக்களுக்கு அல்ல. அத்துடன் மகிந்த ராஜபக்சவை இந்த நாட்டின் பிரதமராக நியமிக்க வாக்கு கேட்ட போது மக்கள் அவருக்கு மூன்றில் இரண்டு பங்கு பாராளுமன்ற அதிகாரத்தை வழங்கிய போது அவரை இந்த நாட்டின் பிரதமராக இருந்து நீக்கியது தவறு என்ற கட்டத்தில் நாம் இருக்கின்றோம், ராஜபக்சக்கள் இந்த நாட்டில் ஆட்சிக்கு வந்தது மக்களின் வாக்குகளினால் அன்றி பலத்தால் அல்ல கட்சி என்ற ரீதியில் தொடர்ந்து மக்களை முன்னேற்றுவோம். இன்றும் இந்த நாட்டில் உள்ள பெரும்பான்மையான மக்கள் ராஜபக்சவின் தேசிய அரசியலே நாட்டிற்கு தேவை என்ற நிலைப்பாட்டில் உள்ளனர் என்பது எமக்கு வலுவான நம்பிக்கை.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் நேற்று (06) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே சாகர காரியவசம் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here