Wednesday, April 24, 2024

Latest Posts

மலையக கர்ப்பிணி பெண்கள் லொறிகளில் வைத்தியசாலை அழைத்துச் செல்லப்படுவதாக குற்றச்சாட்டு

கர்ப்பிணி தாய்மார்கள் இன்றும் கரடு முரடாண பாதைகளில் கொழுந்து ஏற்றிச் செல்லும் லொறிகளில் வைத்தியசாலைக்கு செல்லும் அவலம் இன்னும் ஆங்காங்கே தொடர்வதாக நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் உதயகுமார் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் பாராளுமன்றத்தில் அவர் இன்று ஆற்றிய உரை வருமாறு,

உலகை ஆட்டிப்படைக்கும் சுகாதார பிரச்சினைகளுக்குள்’ கர்ப்பிணித் தாய்மார்களுக்கான போஷாக்கின்மை மற்றும் குழந்தைகளுக்கான போஷாக்கின்மை முக்கிய இடத்தை பிடித்துள்ளது.

இயற்கையுடன் இணைந்த வாழ்க்கை, மாசுபடாத சுத்தமான காற்று, இயற்கைக்கு இசைந்த உணவு பழக்க வழக்கம், தேவையான இயற்கை உடற்பயிற்சி, போன்ற வளமான வாழ்வு கலாசாரத்தில் இருந்து நாம் இன்று LAP, TAB, APP மற்றும் PIZZA, Burger என புதிய வாழ்க்கை முறைக்கு இசைவாக்கம் அடைந்திருக்கிறோம்..

‘உலகமே தலைகீழாக மாறினாலும், பிறப்பு என்பதும், தாய்மை என்பதும், குழந்தை பருவம் என்பதும், வாழ்வில் என்று மாறாதவை’.எனவே, ஆரோக்கியமான உணவு மற்றும், போஷாக்கான உணவுப் பழக்கவழக்கம் என்பவற்றை கர்ப்பிணித் தாய்மார்களும், குழந்தைகளும், சிறுவர்களும், கடைபிடிக்க வேண்டியது அவசியமாகும்.

உலக நாடுகளுடன் ஒப்பிடும் போது, நமது நாட்டில் போஷாக்கில் குறைந்த கர்ப்பிணி தாய்மார்கள் காணப்படுவதுடன் – ஊட்டச்சத்து குறைவான சிசுக்களின் பிறப்பும் அதிகமாகவே உள்ளது.மலையகத்தில் போஷாக்கின்மை பாரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.

இதில், நுவரெலியா மாவட்டத்தில் மந்தபோஷனை பாதிப்பு அதிகமாகவே உள்ளது. ஊட்டச்சத்து பற்றாக்குறை நிலவுவதால் இளம் வயதிலேயே சாதாரன உள, உடல் வளர்ச்சி என்பது கேள்விக்குறியாவே உள்ளதுகர்ப்பிணி மரணம், சிசு மரணம் அதிகரித்து செல்லும் அச்சுறுத்தல் காணப்படுகின்றது.

இத்துடன் சிறுவர் மந்தபோஷனமும் அதிகரித்துள்ளது. இது நாட்டின் ஏனைய பகுதிகளிலும் காணப்பட்டாலும், கூட நுவரெலியா மாவட்டமே கூடிய பாதிப்பினை எதிர்கொள்கிறது. 2000 ஆம் ஆண்டில் செய்யப்பட்ட ஆய்வொன்றில் பெருந்தோட்ட பகுதிகளில் வாழ்ந்த 5 வயதுக்குட்பட்ட சிறுவர்களில் 34 சத வீதமானோர் வளர்ச்சி குன்றியவர்களாக காணப்படுவதாக – கண்டறியப்பட்டதை இங்கு நினைவுபடுத்த விரும்புகிறேன்.

அத்துடன் இறுதியாக நடைபெற்ற சனத்தொகை மற்றும் சுகாதாரக் கணக்கெடுப்பின்படி ஐந்து வயதிற்குக் கீழ்ப்பட்ட 3 இல் 1 முதல் 4 இல் 1 அளவினர் குறை நிறையுடனும், 10 இல் 1 பகுதியினர் நீண்ட கால அல்லது தீவிரமான குறை ஊட்டச்சத்தாலும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

ஏறத்தாழ 72,000 குழந்தைகள் ஒவ்வொரு வருடமும் ஓரளவு முதல் கடுமையான ஊட்டச்சத்து குறைப்பாடால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. அதனால், கர்ப்பிணித் தாய்மார்கள் அன்றாட வாழ்க்கைக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை பெற போஷாக்கான உணவு உண்ண வேண்டியது அவசியமாகும். இவ்விடயத்தில் நாம் கூடிய கவனம் செலுத்த வேண்டும்.

கர்ப்பிணி பெண்கள் அழுத்தமற்ற மனநிலையில், சுகப்பிரவசத்தில் குழந்தைகளை பெற்றெடுக்கக்கூடிய சுற்றுச்சூழல் நிலைமை உருவாக்கப்பட வேண்டும். ஆனால், மலையகத்தில் அவ்வாறு நடப்பது கிடையாது -.

கர்ப்பிணி தாய்மார்கள் இன்றும் கரடு முரடாண பாதைகளில் கொழுந்து ஏற்றிச் செல்லும் லொறிகளில் வைத்தியசாலைக்கு செல்லும் அவலம் இன்னும் ஆங்காங்கே தொடர்கிறது.. இந்த நிலை மாற்றி அமைக்கப்பட வேண்டும்.தோட்ட வைத்தியசாலைகளுக்கு அம்பியூலன்ஸ் வழங்கப்பட வேண்டும்.

தோட்ட வைத்தியசாலைகள் அரசுடமையாக்கப்பட்டு,அங்கு பிரசவ விடுதிகள் அமைக்கப்பட வேண்டும். கர்ப்பிணித் தாய்மார்கள். குழந்தை பெற பல கிலோ மீற்றர்கள் கடந்து செல்ல வேண்டிய அவலத்திற்கு முடிவு கட்டப்பட வேண்டும்.மலையக பெருந்தோட்டப் பகுதிகளைச் சேர்ந்த கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் குழந்தைகளுக்கு முறையான மலசலகூட வசதிகள் இன்றி பல்வேறு சுகாதார பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர்பாதுகாப்பற்ற உணவு, போஷாக்கற்ற உணவு, சமநிலை அற்ற உணவு உட்கொள்ளுதல் போன்ற அனைத்து விடயங்களிலும் – பெருந்தோட்ட கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அத்தியாவசிய பொருட்களில் விலை உயர்வு, பால் மா விலை உயர்வு, திரிபோஷா பற்றாக்குறை பணவீக்கம், வாழ்க்கை செலவு போன்ற பல்வேறு பிரச்சினைகளால் போஷாக்கான உணவுகளை அல்ல சாதாரன மற்றும் அளவான உணவுகளை உட்கொள்வதில் கூட அவர்கள் சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.

இன்று நாட்டில் உள்ள சிறுவர் சீமாட்டி மற்றும் காசல் வைத்தியசாலை போன்ற முக்கிய வைத்தியசாலைகளில் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு வழங்கப்படும் மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. சிறுவர் வைத்தியசாலைக்கு வரும் சிறுவர்களில் பெரும்பாலானோர் மந்தபோசனையால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.இதனால்..இந்த பிரச்சினைகள் குறித்து சுகாதார அமைச்சு கவனம் செலுத்தவேண்டும்.உலக சுகாதார நிறுவனத்தின் – உலக போசணை இலக்கு 2025இன் ஊடாக, 5 வயதுக்குட்பட்ட சிறுவர்களின் குன்றிய வளர்ச்சியை 40 வீதத்தால் குறைப்பதற்கும், உடற்தேய்வை 5 வீதத்துக்கும் குறைவாக குறைப்பதற்கும், அதிக உடல்நிறையை முற்றாகக் கட்டுப்படுத்துவதற்கும், பிறப்பு நிறைக்குறையை 30 சதவீதத்தினால் குறைப்பதற்குமான பரிந்துரைகள் முன்மொழியப்பட்டுள்ளன.

எனவே, இந்த பரிந்துரைகளை செயற்படுத்தி ‘நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்’ என்பதை அர்த்தமுள்ளதாக்கும் வகையில் கர்ப்பிணி தாய்மார்கள் மற்றும் குழந்தைகளின் போஷாக்கு விடயத்தில் அதிகூடிய அக்கறை செலுத்த வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.யுனிசெப் மற்றும் உலக வங்கி தகவல்களின் படி இலங்கையில் மொத்த சனத்தொகையில் 5.7 மில்லியன் மக்கள் உணவு பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ளனர்அத்துடன்,4.9 மில்லியன் மக்கள் உணவு பாதுகாப்பு இன்றி இருப்பதாக தெரியவந்துள்ளது.

அத்துடன், 86 சதவீதமானவர்கள் குறைந்த விலையில் உணவுகளை கொள்வனவு செய்வதுடன், 95 சதவீதமானவர்கள் ஊட்டச்சத்து குறைந்த உணவுகளை கொள்வனவு செய்கின்றனர்.மேலும், 83 சதவீதமானவர்கள் தங்களது வழமையான உணவு அளவை குறைத்து கொண்டுள்ளதுடன்,66 சதவீதமானவர்கள் தமது நாளாந்த உணவு வேலையை குறைத்துள்ளதாக தெரியவந்துள்ளது.இது மிகவும் பாரதூரமான நிலைமையாகும்.

அத்துடன் நமது நாட்டில் தற்போது 4 பேர் உள்ள சாதாரன குடும்பத்திற்கு ஒரு நாளைக்கு 3 வேலை சாதாரன உணவிற்கு குறைந்தப்பட்சம்3500 ரூபா தேவைப்படுகிறது ஆதாவது, மாத்த்திற்கு உணவிற்கு மாத்திர்ம் 105,000 வைப்படுகிறது.

ஆனால், பெருந்தோட்டதொழிலாளர்களை பொறுத்தவரையில் அவர்களின் நாளாந்த சம்பளம் 1000 ரூபா என்ற ரீதியில் மாதாந்தம் அன்னளவாக 20,000 மட்டுமேஇந்த நிலையில் இருந்து கர்ப்பிணி தாய்மார்கள் மற்றும் குழந்தைகள் சிறுவர்களை மீட்டெடுக்க முறையான வேலைத் திட்டம் தயாரிக்கப்பட வேண்டும்.கடந்த நல்லாட்சி அரசாங்கம் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு போஷாக்கு பொதி வழங்கும் திட்டத்தை ஆரம்பித்தது போல ‘குழந்தைகள் பராமரிப்பு மற்றும் போஷாக்கு ஊக்குவிப்புக்கு’ ஆக்கப்பூர்வமான திட்டம் உருவாக்கப்பட வேண்டும் என்றார்.

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.