வவுனியாவில் தமிழ்ப் பொது வேட்பாளரை ஆதரித்து பிரசாரக் கூட்டம் – மக்கள் பெருமளவில் பங்கேற்பு

0
52

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்த் தேசியப் பொதுக்கட்டமைப்பினரால் களமிறக்கப்பட்டுள்ள தமிழ்ப் பொது வேட்பாளர் பாக்கியசெல்வம் அரியநேத்திரனுக்கு ஆதரவு தெரிவிக்கும் தேர்தல் பிரசாரக் கூட்டம் வவுனியா கலைமகள் சனசமூக நிலைய மைதானத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது.

முன்னதாக குருமன்காடு பகுதியில் இருந்து மங்கள இசை முழங்க தமிழ்ப் பொது வேட்பாளர் அரியநேத்திரன் மற்றும் ஏனைய அரசியல் பிரமுகர்கள் நிகழ்வு மைதானத்துக்கு ஊர்வலமாக அழைத்து வரப்பட்டனர்.

அங்கு ஈகச்சுடர் ஏற்றப்பட்டதைத் தொடர்ந்து கூட்டம் ஆரம்பமாகியது.

முன்னாள் நாடாளுமன்றஉறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தலைமையில் இடம்பெற்ற இந்தக் கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன், ஜனநாயகப் போராளிகள் கட்சியின் தலைவர் வேந்தன், யாழ். மாநகர சபையின் முன்னாள் மேயர் வி.மணிவண்ணன், முன்னாள் வடக்கு மாகாண விவசாய அமைச்சர் சிவநேசன், தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் அருண் தம்பிமுத்து, அரசியல் ஆய்வாளர்களான நிலாந்தன், ஜதீந்திரா, யோதிலிங்கம் மற்றும் பெருமளவான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here