இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க ஐக்கிய மக்கள் சக்தியின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் இணைந்து கொண்டார்.
தற்போது கண்டியில் நடைபெற்று வரும் ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுக்கூட்டத்திற்கு சென்ற அவர், நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதாக குறிப்பிட்டார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தி காலி மாவட்டத்தில் இருந்து தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக பாராளுமன்றத்திற்கு சென்ற கீதா குமாரசிங்க, தற்போது பெண்கள் மற்றும் சிறுவர் இராஜாங்க அமைச்சராக கடமையாற்றி வருகின்றார்.