இலங்கை தொடர்பான மனித உரிமை அறிக்கைக்கு ஐரோப்பிய ஒன்றியம் ஆதரவு

Date:

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் முன்வைக்கப்பட்ட அறிக்கையை ஏற்றுக்கொள்வதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் ஐரோப்பிய ஒன்றியம் நேற்று (09) தமது நிலைப்பாட்டை அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 57ஆவது கூட்டத்தொடர் சுவிட்சர்லாந்தின் ஜெனிவாவில் நேற்று ஆரம்பமானது.

இலங்கை தொடர்பில் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தினால் தயாரிக்கப்பட்ட அறிக்கை தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

குறித்த அறிக்கையின் மூலம் சுட்டிக்காட்டப்பட்டுள்ள உண்மைகளை ஏற்றுக்கொள்வதாகவும், இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகள் தொடர்பில் அவதானம் செலுத்தி வருவதாகவும் ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.

மேலும், இது தொடர்பான அறிக்கை தொடர்பில் பிரித்தானியாவும் நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையின்படி, இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சுயாதீன விசாரணை நடத்தப்பட வேண்டுமென அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், கனடா, மலாவி, மொண்டெனேகுரோ, வடக்கு மெசிடோனியா, அமெரிக்கா ஆகிய நாடுகளின் தலைமையிலான குழுவும் இலங்கையின் மனித உரிமைகள் தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

வெளியானது வெட்டுப்புள்ளி

2025 ஆம் ஆண்டு நடைபெற்ற தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சைப்...

இந்திய துணை ஜனாதிபதியுடன் செந்தில் தொண்டமான் சந்திப்பு!

இந்திய துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணனை இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான்...

இன்று நுகேகொடையில் பாரிய பேரணி

பல அரசியல் கட்சிகள் இணைந்து ஏற்பாடு செய்துள்ள எதிர்ப்பு பேரணி இன்று...

40 மில்லியன் மதிப்புள்ள “குஷ்” போதைப்பொருள் கடத்திய மூவர் கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் அனைத்து சோதனைகளையும் முடித்துவிட்டு, விமான நிலையத்திற்கு வெளியே...