தயாசிறியை அடுத்து திலங்க

Date:

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் திலங்க சுமதிபாலவை அந்தப் பதவியில் இருந்து நீக்கும் திட்டம் இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

திலங்க சுமதிபால ஜனாதிபதி ரணில் அரசாங்கத்தில் இணைந்து கொள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மேற்கொண்ட முயற்சிக்கு எதிராக நின்று அதற்கு எதிராக தயாசிறி ஜயசேகரவுடன் இணைந்து செயற்பட்டவர்.

இதன் காரணமாக, தயாசிறி ஜயசேகரவின் கட்சி உறுப்புரிமை இடைநிறுத்தப்பட்டதுடன், அவர் கட்சியின் பொதுச் செயலாளர் பதவியிலிருந்தும் நீக்கப்பட்டார்.

முன்னாள் செயலாளர் நாயகம் மஹிந்த அமரவீரவினால் வழக்கு ஒன்றும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

எனவே, திலங்கவை நீக்கி மீண்டும் அமரவீரவுக்கு வழங்குமாறு அரசாங்கத்தில் அமைச்சர்களாகப் பொறுப்பேற்றுள்ள ஸ்ரீலங்கா கட்சித் தரப்பிலிருந்து கட்சித் தலைவருக்கு தொடர்ச்சியாக கோரிக்கைகள் விடுக்கப்பட்டு வருவதாகக் கேட்கப்படுகிறது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

சங்கீத்சன் பிணையில் விடுதலை

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சொல்லிசை பாடகர்...

4 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

நாட்டில் 4 மாவட்டங்களுக்கு முதற்கட்ட மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்று (12) முற்பகல்...

அரசாங்கம் நீதிமன்ற நியமனங்களை தாமதப்படுத்துவதாக குற்றச்சாட்டு

உச்ச நீதிமன்றத்தில் தற்போது 4 நீதிபதி பதவிகள் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில்...

நாம் ராஜபக்சகளை போன்று சுனாமி திருடர்கள் அல்ல – பிமல் ரத்நாயக்க

எந்த அரசாங்கத்திலும் சில விடயங்கள் நடைமுறையில் இருந்து கொண்டிருந்தாலும், அவை அனைத்தும்...