ஆளுநர் செந்தில் ஊடாக ஜனாதிபதிக்கு கிடைத்த வாழ்த்து

Date:

இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், கிழக்கு மாகாண ஆளுநருமான செந்தில் தொண்டமான் கேரள முதலமைச்சர் பிரனய் விஜயை சந்தித்தார்.

கேரள முதலமைச்சர் அலுவலகத்தில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற இந்த சந்திப்பில் கேரளாவுடன் இணைந்து கிழக்கு மாகாணத்தில் சுற்றுலா அபிவிருத்திகளை மேற்கொள்வது குறித்து கலந்துரையாடப்பட்டது.

மேலும் 1970ஆம் ஆண்டு இலங்கையில் உள்ள மலையக மக்கள் 1480 குடும்பம் கேரளாவில் மீள்குடியேற்றப்பட்டனர். இவர்கள் R.P.L( Rehabilitation Plantation limited) நிறுவனத்திலும், கேரளா வன அபிவிருத்தி கூட்டுத்தாபனத்திலும் தொழில்புரிகின்றனர். அவர்கள் எதிர்கொள்ளும் பிர்சசினைகளுக்கு தீர்வுகாண்பது குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டது.

இலங்கையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னெடுத்துவரும் பணிகளுக்கு கேரள முதல்வர் பிரனய் விஜயன் வாழ்த்துக் கூறியதுடன், ஆளுநர் செந்தில் தொண்டமான், இலங்கைக்கு வருகைதருமாறு விடுத்த அழைப்பை ஏற்று இலங்கை வருவதாகவும் உறுதியளித்தார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

‘அண்டை நாட்டுக்கு முதலிடம்’ – இந்திய துணை ஜனாதிபதி உறுதி

இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நாட்டுக்கு வருகை தந்துள்ள இந்திய...

இந்தியத் துணை ஜனாதிபதிக்கு அலரி மாளிகையில் விருந்துபசாரம்

இருநாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள இந்தியத் துணை ஜனாதிபதி...

இந்தியத் துணை ஜனாதிபதி – சஜித் இடையே சந்திப்பு

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இந்தியத் துணை ஜனாதிபதி ஸ்ரீ சி.பி....

நீண்ட நாட்களுக்குப் பின் துப்பாக்கிச் சூடு

மிதிகம பகுதியில் நேற்று (18) இரவு துப்பாக்கிச்சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக...