ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான கமாண்டோ சலிந்துவுக்கு T56 வெடிமருந்துகளை விற்பனை செய்த குற்றச்சாட்டின் பேரில் இராணுவ லுதினன் கேர்னல் ஒருவர் இன்று (11) மேல்மாகாண வடக்கு குற்ற விசாரணை பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த இராணுவ அதிகாரி கைது செய்யப்பட்ட நேரத்தில் முல்லைத்தீவின் மல்லாவியில் உள்ள இராணுவ முகாம் ஒன்றின் கட்டளை அதிகாரியாக பணியாற்றி வந்துள்ளார்.
கணேமுல்ல கமாண்டோ படைப்பிரிவில் பணியாற்றிய காலத்தில் T56 துப்பாக்கிகளுக்கு பயன்படுத்தப்படும் 260 தோட்டாக்களை குற்றவாளியான கமாண்டோ சலிந்தவுக்கு இரண்டு சந்தர்ப்பங்களில் 650,000 ரூபாய்க்கு அவர் விற்பனை செய்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
அத்துடன் அவர் மீது மேலும் இரண்டு குற்றச்சாட்டுகளும் உள்ளதாக கூறப்படுகின்றது.
கைது செய்யப்பட்ட இராணுவ அதிகாரி மேலதிக விசாரணைகளுக்காக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் விசாரணைகளுக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளார்.