தெஹிவளை, கவுடான கைக்குண்டுத் தாக்குதலில் இரண்டு சிறுவர்கள் பலி

0
180

தெஹிவளை, கவுடான சிறிசகபோ வீதியில் உள்ள வீடு ஒன்றை இலக்கு வைத்து இன்று (11) அதிகாலை நடத்தப்பட்ட கைக்குண்டுத் தாக்குதலில் இரண்டு சிறுவர்கள் உயிரிழந்தனர். 

இந்த தாக்குதலில் வீட்டில் இருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை மற்றும் இரண்டு பிள்ளைகள் காயமடைந்த நிலையில் களுபோவில போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். 

அவர்களில் 10 மற்றும் 14 வயதுகளையுடைய இரண்டு சிறுவர்களும் உயிரிழந்தனர். 

அதேநேரம் உயிரிழந்த சிறுவர்களின் 52 வயதுடைய தந்தை தொடர்ந்தும் சிகிச்சைப் பெற்று வருகின்றார். 

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here