உதய கம்மன்பிலவை கைது செய்வதில்லை

0
536

முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பிலவை கைது செய்வது குறித்து தற்போது எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று குற்றப் புலனாய்வுத் திணைக்களம் இன்று (12) மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகளின் சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான உடன்படிக்கையின் கீழ் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தன்னைக் கைது செய்யத் தயாராகி வருவதாகவும், தன்னைக் கைது செய்வதைத் தடுக்க உத்தரவு பிறப்பிக்குமாறும் கோரி உதய கம்மன்பில தாக்கல் செய்த ரிட் மனு இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. 

குற்றப் புலனாய்வுத் திணைக்களம் சார்பாக ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் சுதர்ஷன டி சில்வா, மனுதாரர் உதய கம்மன்பிலவை கைது செய்வது குறித்து பொலிஸார் இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை என்று நீதிமன்றத்திற்குத் தெரிவித்தார். 

விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், அதன் பின்னர் இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார். 

அதன்படி, மனுவின் பரிசீலனை எதிர்வரும் 17 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here