இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டு நாட்டிற்கு அழைத்து வரப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத் தலைவர்களில் ஒருவரான பெக்கோ சமனின் நெருங்கிய நண்பர் ஒருவர், T81 துப்பாக்கியுடன் பொலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பெக்கோ சமன் தற்போது தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறார், அதே நேரத்தில் அவரது நெருங்கிய நண்பர் எம்பிலிப்பிட்டிய கங்கேயாய பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரிடமிருந்து 97 தோட்டாக்கள், 2 மகசின்கள் மற்றும் ஒரு இராணுவ சீருடையையும் பொலீசார் மீட்டுள்ளனர்.
மேற்கு வடக்கு குற்றப்பிரிவு அதிகாரிகள் நடத்திய விசாரணைகளில் தெரியவந்த தகவல்களின் அடிப்படையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.