அரசாங்கத்தின் நிதி சாராத சொத்துகளைக் கணக்கிடும் செயற்பாட்டில் பல்வேறு குறைபாடுகள் காணப்படுகின்றமை அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவில் (COPA) வௌிக்கொணரப்பட்டுள்ளது.
அரச நிறுவனங்களின் நிதிச்சொத்துகளை முகாமைத்துவப்படுத்தும் செயற்பாட்டின் தற்போதைய நிலைமை குறித்து ஆராய்வதற்காக இடம்பெற்ற கலந்துரையாடலில் இது தெரியவந்துள்ளது.
நாட்டின் சொத்துகள் தொடர்பில் கூட்டறிக்கையொன்றை தயாரிப்பதற்கான முறைமையொன்று இதுவரை காணப்படவில்லை என கணக்காய்வாளர் நாயகம் W.P.C.விக்ரமரத்ன சுட்டிக்காட்டினார்.
இது பாரதூரமான நிலைமை என அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவின் உறுப்பினரான பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.