ஜனாதிபதித் தேர்தலைப் புறக்கணிப்பதே எமது நிலைப்பாடு – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

Date:

”இலங்கை தமிழரசுக் கட்சி, சஜித் பிரேமதாசாவிற்கு ஆதரவு வழங்குவதாக தெரிவிக்கும் விடயமானது ரணில் விக்ரமசிங்கவிற்கு அதிகளவான வாக்குகளை சேர்ப்பதற்கான சதி நடவடிக்கை” என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கட்சிகள் சஜித் பிரேமதாசவுடன் கூட்டு சேர்ந்துள்ள நிலையில் சிங்கள மக்கள் மத்தியில் சஜித்திற்கான ஆதரவினை குறைக்கும் நடவடிக்கை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை 2024 ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதி தேர்தலை புறக்கணிப்பதே தமது கட்சியின் நிலைப்பாடு என்றும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சுட்டிக் காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நிதி அமைச்சின் உதவி இயக்குநர் தற்கொலை

இலங்கை நிதி அமைச்சின் வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தில் (ERD) உதவி இயக்குநராகப்...

இலங்கையின் கடன் சுமை பாரிய அளவில் அதிகரிப்பு

ரூபாய் மதிப்பு சரிவடைந்ததன் விளைவாக நாட்டின் கடன் சுமை ரூபாய் 1.1...

ரணிலுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

அரசு நிதியை தவறாக பயன்படுத்தி லண்டன் நோக்கி தனிப்பட்ட பயணம் மேற்கொண்டதாக...

கட்சியில் இருந்து முழுமையாக விலகுமாறு எரானிடம் SJB கோரிக்கை

இலங்கை கிரிக்கெட் இடைக்கால குழுவின் தலைவராக எரான் விக்கிரமரத்ன நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து,...