26 விரல்களுடன் அதிசய பெண் குழந்தை:தேவியின் அவதாரமாக கருதி குடும்பத்தினர் மகிழ்ச்சி

0
290

இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த தம்பதியருக்கு 26 விரல்களுடன் அதிசய பெண் குழந்தையொன்று பிறந்துள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் பரத்பூர் பகுதியை சேர்ந்தவர் பொலிஸ் பாதுகாப்பு படையில் தலைமை அதிகாரியான கோபால் பட்டாச்சாரியா, அவரது மனைவி சர்ஜூ தேவி என்ற தம்பதியருக்கு குறித்த பெண் குழந்தை பிறந்துள்ளது.

இதுகுறித்து அந்த பெண்ணுக்கு பிரசவம் பார்த்த வைத்தியர் சோனி கூறுகையில்,

“குழந்தைக்கு 26 விரல்கள் இருப்பதால் எந்தவித பாதிப்பும் இல்லை. ஆனால், இது ஒரு மரபணு கோளாறு ஆகும். அதே நேரம் குழந்தையின் தாயாரும் ஆரோக்கியமான நிலையில் உள்ளார்.”என தெரிவித்துள்ளார்.

அந்த குழந்தையின் ஒவ்வொரு கையிலும் 7 விரல்கள் மற்றும் ஒவ்வொரு காலிலும் 6 விரல்கள் என மொத்தம் 26 விரல்கள் இருந்தது. இதனால் அந்த குழந்தை தேவியின் அவதாரமாக கருதி அவரது குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here