துபாயில் இருந்து இலங்கைக்கு கடத்தப்பட்ட தங்க பிஸ்கட்கள் விமான நிலையத்தில் அகப்பட்டது

Date:

சுமார் ஒரு கோடியே முப்பது இலட்சம் ரூபா பெறுமதியான ஐந்தரை தங்க பிஸ்கட்டுகளை சட்ட விரோதமாக கொண்டுவந்த ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இன்று (21) காலை பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு திணைக்கள அதிகாரிகள் குழுவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் காலி பிரதேசத்தில் வசிக்கும் 52 வயதான வர்த்தகராவார்.

இவர் டுபாயிலிருந்து SL-226 என்ற ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானத்தில் இன்று காலை 5.30 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.

விமான நிலையத்தில் அனைத்து சோதனைகளையும் முடித்துக்கொண்டு அவர் விமான நிலையத்திலிருந்து வெளியே செல்லும்போது, பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் குழு அவரது பயணப்பையில் இந்த தங்க பிஸ்கட்டுகளை கண்டுபிடித்து அவரைக் கைது செய்தனர்.

பின்னர், இந்த பயணி மற்றும் அவர் சட்ட விரோதமாக கொண்டுவந்த தங்க பிஸ்கட்டுகள் அனைத்தும் மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

கொழும்பில் இரு முக்கிய புள்ளிகள் கைது

முன்னாள் அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவின் மகனும் சட்டத்தரணியுமான ரகித ராஜபக்ஷ மற்றும்...

வெனிசுவேலா நிலநடுக்கம் – பலர் பலி

வெனிசுவேலாவின் தலைநகரான கராகஸில் சில வினாடிகள் இடைவெளியில் இரண்டு பெரிய நிலநடுக்கங்கள்...

அஸ்வெசும நலத்திட்டத்தில் மாற்றம்

இனி வரும் காலங்களில் அஸ்வெசும நலத்திட்டத்தின் மூலமான உதவித்தொகை, ஏழை மற்றும்...

மே மாதத்தில் தேசிய பணவீக்கம் 5.4% ஆக உயர்வு

தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் (NCPI) அடிப்படையில், 2026 மே மாதத்தில்...