தேசிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்டத்தின் புதிய நாடாளுமன்ற உறுப்பினராக லக்ஷ்மன் நிபுணராச்சி நியமிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அநுரகுமார திஸாநாயக்க ஜனாதிபதியாக பதவியேற்றதன் மூலம் ஏற்பட்ட வெற்றிடத்துக்காகவே அவர் நியமிக்கப்படவுள்ளார்.
2020 பொதுத் தேர்தல் முடிவுகளின்படி, தேசிய மக்கள் சக்தியின் விருப்புப் பட்டியலில் அடுத்த வேட்பாளராக உள்ள லக்ஷ்மன் நிபுணராச்சி, தேர்தல்கள் ஆணைக்குழுவினால் நாடாளுமன்ற உறுப்பினராக வர்த்தமானியில் வெளியிடப்படவுள்ளார்.
அதன் பின்னர் அவர் பதவிப் பிரமாணம் செய்ய முடியும்.
லக்ஷ்மன் நிபுணராச்சி இதற்கு முன்னர் ஜனதா விமுக்தி பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினராகவும் மேல் மாகாண சபை உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார்.