காட்டு யானைகளை கிராமங்களில் இருந்து விரட்டத் தேவையான யானைக் குண்டுகளை வாங்குவதற்கு வருடாந்தம் 280 கோடி ரூபாவை அரசாங்கம் செலவிட வேண்டியுள்ளதாக வனஜீவராசிகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஆண்டுக்கு 14 லட்சம் யானைப் பட்டாசுகள் தேவைப்படுவதாகவும், உள்ளூர் பட்டாசு உற்பத்தியாளர்களிடமிருந்து அவற்றை வாங்குவதாகவும் திணைக்களம் கூறுகிறது.
காட்டு யானைகள் கிராமங்களை தாக்கும் போது அவற்றை விரட்டும் வகையில், இவ்வாறு வாங்கப்படும் யானைக் குண்டுகள் மக்களுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது.
இதேவேளை நாட்டில் தற்போது கச்சாப் பொருட்களின் விலை அதிகரித்துள்ளமையினால் எதிர்காலத்தில் யானைகளை சுடும் செலவு மேலும் அதிகரிக்கும் எனவும் வனஜீவராசிகள் அதிகாரிகள் விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளனர்.