காட்டிக் கொடுத்த பொலிஸ் அதிகாரி விரைவில் கைது

0
254

பாதாள உலகக் கும்பல் தலைவர் கெஹல்பத்தர பத்மே உள்ளிட்ட சிலரை கைது செய்வதற்காக பொலிஸ் மாஅதிபர் தலைமையிலான குழு, இந்தோனேசியாவுக்கு வந்துள்ள தகவலை பாதாள குழுவினருக்கு வழங்கிய பொலிஸ் அதிகாரியை கைது செய்யும் விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளன.

பொலிஸ் சேவையிலிருந்தவாறே  இந்த துரோகத்தைச் செய்த அதிகாரி, மன்னிக்கப்பட மாட்டார் என்றும் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்தார்.

பிரதி பொலிஸ் மாஅதிபர் ரோஹன ஒலுகல மற்றும் மஹிந்த ஜெயசுந்தர ஆகியோர் தம்மைக் கைது செய்ய இந்தோனேசியாவிற்கு வந்துள்ளதாக பொலிஸ் உயர்  அதிகாரி மைக்குத் தகவல் அளித்ததாக, பாதாள பாதாள உலக குண்டர்களில் ஒருவரான தரூன், தலைவர் கெஹல்பத்தரவுக்கு தெரிவித்ததாக குறிப்பிட்டுள்ளார்.

தரூன் என்ற பாதாள உலகக் குண்டர் கெஹல்பத்தர பத்மேவின் பாதாள உலகக் கும்பலில் ஒரு பலசாலி, இவர் தற்போது  வெளிநாட்டிலிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இரண்டு உதவி பொலிஸ் அதிகாரிகள் இந்தோனேசியாவிற்கு வந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டவுடன், கெஹல்பத்தர பத்மே மற்றும் அவரது குழுவினர் தங்கியிருந்த சொகுசு குடியிருப்பை கைவிட்டு வேறு அடுக்குமாடிக்கு தப்பிச் சென்றுள்ளனர்.

கெஹல்பத்தர பத்மேவுக்கு சர்வதேச பொலிஸினால் விடுக்கப்பட்ட  சிவப்பு அழைப்பாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் அதிகாரி அவருக்குத் தெரிவித்ததாகவும், அந்த பொலிஸ் அதிகாரி சம்பந்தப்பட்ட சிவப்பு அழைப்பாணையின் நகலை கெஹல்பத்தர பத்மேவின் வாட்ஸ்அப் தொலைபேசிக்கு அனுப்பியதாகவும் தெரியவந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here