எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்பட்டு அரச ஊழியர்களின் வரிப் பிரச்சினைக்கு சற்று நிவாரணம் வழங்கப்பட வேண்டுமென ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார தெரிவித்துள்ளார்.
“எதிர்வரும் வரவு செலவுத் திட்டம் தொடர்பில் ஜனாதிபதியுடன் நாம் நடத்திய கலந்துரையாடலின் போது – நாங்கள் இன்னும் அரசாங்கத்தில் இருக்கிறோம் – அரசாங்க ஊழியர்களுக்கு ஓரளவு நிவாரணம் வழங்கப்பட வேண்டும், சம்பள அதிகரிப்பு வேண்டும் என்பதில் ஜனாதிபதி சற்று நம்பிக்கை வைத்திருந்தார். வாழ்க்கைச் செலவுக்கு ஓரளவு நிவாரணம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளோம். இவற்றை ஜனாதிபதி பரிசீலித்து வருவதாகவும் அவர் கூறினார்.
அரசு ஊழியர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள வரிச்சுமை குறித்து சிக்கல் ஏற்பட்டுள்ளது. அவர்கள் அதைப் பற்றி புகார் செய்கிறார்கள். அவர்களுக்கு நிவாரணம் கொடுக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.
மேலும், அந்த பெரிய வணிகர்களிடமிருந்தும் மற்றவர்களிடமிருந்தும் எடுத்துக் கொண்டால், எந்த பிரச்சனையும் இல்லாமல் அரசாங்கத்திற்கு தேவையான வரிகள் கிடைக்கும். என நேற்று (30) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜகத் குமார மேற்கண்டவாறு தெரிவித்தார்.