தம்பலகாமம் வைத்தியசாலையில் தீ விபத்து; கிழக்கு ஆளுநர் பிறப்பித்த உத்தரவு

0
113

திருகோணமலை – தம்பலகாமம் பிரதேச வைத்தியசாலையில் இன்று (01) தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

குறித்த விபத்தில் வெளி நோயாளர் பிரிவு மற்றும் மருந்தகம் போன்ற பகுதிகள் தீப்பற்றி உள்ள நிலையில், சம்பவ இடத்திற்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர், மாகாண பணிப்பாளர் ஆகியோரை உடனடியாக சென்று கள நிலவரங்களை ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் பணிப்புரை விடுத்துள்ளார்.

மேலும் தீ விபத்து தொடர்பான காரணங்களை கண்டறிய மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸாருக்கு ஆளுநரால் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here