கூட்டாகப் போட்டியிட முயற்சி எடுப்போம் – தமிழ் கட்சிகள் இந்தியத் தூதுவரிடம் தெரிவிப்பு

Date:

“கடந்த காலங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாகச் செயற்பட்டபோது எங்களுக்குக் கசப்பான அனுபவங்கள் உள்ளன. இருந்தாலும் அவை தொடர்பில் பேசி கூட்டாகப் போட்டியிட முயற்சிகள் எடுப்போம்.”

  • இவ்வாறு இலங்கைக்கான இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜாவிடம் நேரில் தெரிவித்தனர் தமிழரசு, ரெலோ, புளொட் மற்றும் ஈ.பி.ஆர்.எல்.எப். ஆகிய கட்சிகளின் தலைவர்கள்.

கொழும்பிலுள்ள இந்தியத் தூதுவரின் இல்லத்தில் நேற்று திங்கட்கிழமை இந்தியத் தூதுவருக்கும் தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கும் இடையில் சந்திப்பு நடைபெற்றது. இதன்போதே அவர்கள் மேற்கண்டவாறு கூறினர்.

நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கட்சிகளின் நிலைப்பாடு தொடர்பில் இந்தியத் தூதுவர் அவர்களிடம் கேட்டறிந்தார்.

அவருக்குப் பதிலளித்த தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்கள்,

“நாடாளுமன்றத் தேர்தலைத் தமிழ்த் தேசியக் கட்சிகள் தனித்தனியாக எதிர்கொள்வதால் வாக்குகள் சிதறடிக்கப்படும். இதனால், பிரதிநிதித்துவத்தை இழக்காத வகையில் ஒன்றாகப் போட்டியிடவே விரும்புகிறோம். எனினும், இது உடனடியாகச் சாத்தியமில்லை. கடந்த காலங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாகச் செயற்பட்டபோது எங்களுக்குக் கசப்பான அனுபவங்கள் உள்ளன. இருந்தாலும் அவை தொடர்பில் பேசி கூட்டாகப் போட்டியிட முயற்சிகள் எடுப்போம்.” – என்று கூறினர்.

நேற்று பிற்பகல் 3 மணிக்கு ஆரம்பித்த இந்தச் சந்திப்பு சுமார் ஒன்றரை மணிநேரம் நீடித்திருந்தது. இந்தச் சந்திப்பில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச்செயலாளர் ப.சத்தியலிங்கம், தமிழரசுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், ரெலோ கட்சியின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், புளொட் கட்சியின் தலைவர் த.சித்தார்த்தன், ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

இந்தோனேசிய கடற் பகுதியில் பாரிய நிலநடுக்கம்

இந்தோனேசியாவின் வடக்கு மொலுகா கடற்பகுதியில் 7.4 மெக்னிடியூட் அளவில் பாரிய நிலநடுக்கம்...

IMF ஒப்பந்தம் காரணமாக மக்களுக்கு நிவாரணம் வழங்க முடியாது

சர்வதேச நாணய நிதியம் (IMF) உடன் கையெழுத்திட்டுள்ள ஒப்பந்தத்தின் காரணமாக, 2028...

வைத்தியர்கள் இன்றும் பணிப்புறக்கணிப்பு

அனைத்து அரச வைத்தியசாலைகளிலும் உள்ள வைத்தியர்கள் இன்றும் (02) காலை 8.00...

நாளை ஜனாதிபதி அனுரவை சந்திக்கத் தயாராகும் மனோ அணி

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவை, தமிழ் முற்போக்கு கூட்டணி தூதுக்குழு நாளை...