அமெரிக்க தூதுவர் ஜூலி சங் – ஜனாதிபதி அநுரவுடன் சந்திப்பு: இருதரப்பு உறவுகளை வலுப்படுத்த ஆலோசனை

0
122

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி இன்று செவ்வாய்க்கிழமை ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.

இதன்போது, இலங்கையின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்றமைக்காக அநுரகுமார திசாநாயக்கவிற்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்த அமெரிக்க தூதுவர், அமெரிக்காவிற்கும் இலங்கைக்கும் இடையிலான வலுவான இருதரப்பு உறவுகளை தொடர்ந்தும் மேம்படுத்துவது குறித்து கலந்துரையாடினார்.

அமெரிக்காவிற்கும் இலங்கைக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள், பொருளாதார மற்றும் சமூக ஒத்துழைப்பை வலுப்படுத்தல், இரு நாடுகளுக்கும் இடையிலான பரஸ்பர ஆர்வமுள்ள துறைகள் குறித்தும் இதன்போது விசேட கவனம் செலுத்தப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here