நாகப்பட்டித்திற்கும் காங்கேசன்துறை துறைமுகத்துக்கு இடையில் கப்பல் சேவை ஆரம்பம்!

0
205

இந்தியாவின் நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து காங்கேசன்துறை துறைமுகத்துக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து இன்று (வெள்ளிக்கிழமை) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது.

கேரளா மாநிலத்தின் கொச்சி துறைமுகத்தில் இருந்து நாகப்பட்டினம் துறைமுகத்துக்கு நேற்று புறப்பட்ட கப்பல், இன்று நாகப்பட்டினத்தை வந்தடைந்தது.

இந்த நிலையில், குறித்த கப்பலானது நாளைய தினம் நாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து காங்கேசன் துறைக்கான போக்குவரத்தை சோதனை முறையில் ஆரம்பிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், துறைமுகத்திற்கான அனைத்து நிர்மாணப்பணிகளும் நிறைவுப்பெற்று ஜனவரி மாதம் முதல் இந்தியாவிற்கும் இலங்கைக்குமான பயணிகள் கப்பல் போக்குவரத்து ஆரம்பிக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இராமேஸ்வரம் மற்றும் தலைமன்னார் ஆகிய இடங்களுக்கு இடையே கப்பல் சேவையை புதுப்பிக்க ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தமிழகத்தின் நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் அமைச்சர் ஏ.வி.வேலு தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here