இந்தியாவின் சிக்கிமில் வரலாறு காணாத வெள்ளப்பெருக்கு; 19 பேர் பலி

0
183

இந்தியாவின் சிக்கிம் மாநிலத்தில் மேகவெடிப்பு காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 19ஆக உயர்ந்துள்ளது.

இமயமலைத் தொடரில் அமைந்துள்ள சிக்கிம் மாநிலம் அவ்வப்போது இயற்கை பேரிடரில் சிக்கித் தவித்து வருகிறது.

அந்த வகையில் வடக்கு சிக்கிமில் மேகவெடிப்பு காரணமாக பெய்த கனமழை மற்றும் தீஸ்தா ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு நிலைமையை நிலை குலையச் செய்துள்ளது.

முழுவதுமாக நிரம்பிய சுங்தாங் அணையில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வெளியேறியதும் ஆற்றில் வெள்ளப்பெருக்குக்கு காரணமாக அமைந்தது.

ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டவர்களில் 19 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.

இதில் 4 ராணுவ வீரர்களும் அடக்கம், இதோடு 102 பேரை காணவில்லை.

மேலும் வெள்ளத்தில் இருந்து 2,011 பேர் மீட்கப்பட்டுள்ளதாக சிக்கிம் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.

தண்ணீர் வேகமாக பாய்ந்தோடியதால் காணாமல் போனவர்களை ஆற்றின் தாழ்வான பகுதிகளில் தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட மக்கள் பல்வேறு பகுதிகளில் உள்ள 26 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here