இந்த ஆண்டுக்கான பொருளாதார நோபல் பரிசு அமெரிக்க பொருளாதார வரலாற்றாசிரியர் பேராசிரியர் கிளாடியா கோல்டிங்கிற்கு வழங்கப்பட்டது.
பெண்களின் வேலை வாய்ப்பு மற்றும் ஊதியத்திற்காக அவர் ஆற்றிய பணிக்கான அங்கீகாரமாக இது அமைந்தது.
பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பெறும் மூன்றாவது பெண்மணி என்ற பெருமையை கோல்டிங் பெறுவார்.
77 வயதான கோல்டிங் அமெரிக்காவில் உள்ள ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக பணிபுரிகிறார்.