ரன் மல்லியை இலங்கைக்கு அழைத்து வர நடவடிக்கை

0
23

பல ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களுடன் தொடர்புடைய போதைப்பொருள் கடத்தல்காரரான ‘ரன் மல்லி’ எனப்படும் சரித் சந்தகெலும் பல்கேரியாவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.

இன்டர்போலினால் பிறப்பிக்கப்பட்டிருந்த சிவப்பு அறிவித்தல்களின் அடிப்படையில், பல்கேரிய பாதுகாப்புப் படையினரால் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

போலியான தகவல்களை பயன்படுத்தி ஐரோப்பாவிற்குள் நுழைய முயன்றபோதே அவர் பல்கேரியப் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக இன்டர்போல் அமைப்பும் உறுதிப்படுத்தியுள்ளது.

அவரை நாட்டிற்கு அழைத்து வர நடவடிக்கை வெளியுறவு அமைச்சகம் மற்றும் இன்டர்போலுடன் இணைந்து தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக பொலிஸ் மாஅதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார்.

நீண்ட காலமாக துபாயில் வசித்துக்கொண்டு இலங்கையின் போதைப்பொருள் வலையமைப்பை இயக்கி வரும் வெள்ளவத்தையை சேர்ந்த சரித் சந்தகெலும், ‘ஹரக் கட்டா’ எனப்படும் நதுன் சிந்தகவின் போதைப்பொருள் வலையமைப்பின் பிரதான செயற்பாட்டு உறுப்பினராக அடையாளம் காணப்பட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here