முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, இன்று (12) காலை திடீரென ஏற்பட்ட உடல்நலக் குறைவு காரணமாக கொழும்பு நவலோகா வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கிருலப்பனையில் உள்ள தனது இல்லத்தில் இருந்தபோது அவருக்குத் திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்களை மேற்கோள்காட்டித் தகவல்கள் தெரிவிக்கின்றன.
