சாமர சம்பத் 23ஆம் திகதி வரை விளக்கமறியலில்!

0
31

இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க, எதிர்வரும் ஒக்டோபர் 23ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம முன்னிலையில் அவர் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

முதன்மைக் கைத்தொழில்கள் இராஜாங்க அமைச்சராகப் பதவி வகித்த காலத்தில், பொஸ்பேட் ஏற்றுமதி அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்காக இரண்டு தனியார் நிறுவனங்களிடமிருந்து 81 இலட்சம் ரூபாய் இலஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் அளிப்பதற்காக இன்று (12) காலை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கு அவர் சென்றிருந்தார்.

இதன்போதே அவர் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here