தனி வழிப் பயணம் செல்லும் பொன்சேகா

0
146

“மக்கள் புரட்சியை நோக்கி கட்சி சார்பற்ற நிராயுதபாணியான போராட்டம்” என்ற தொனிப்பொருளில் இன்று (14) யக்கல நகரில் ஆர்ப்பாட்டம் ஒன்று பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா வின் பங்கேற்பில் இடம்பெற்றது.

தற்போதைய அரசாங்கம் தொடர்ந்தும் மக்களுக்கு எதிராக செயற்பட்டால் இவ்வாறான போராட்டங்களை முன்னெடுக்கும் எனவும் பொன்சேகா தெரிவித்தார்.

மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதும், மக்களுக்கு நீதி வழங்கப்படுவதைப் பார்ப்பதும் தனது நோக்கமாகும் என பொன்சேகா வலியுறுத்தினார்.

மக்களுக்கு சரியான விடயங்களை புரியவைத்து நாட்டில் நிலவும் ஊழல் அரசியலை நிராகரிப்பதற்கான அணிதிரளும் முயற்சியே தாம் மேற்கொள்வதாகவும், இது அரசியல் கட்சியல்ல, மக்களை சரியான இடத்திற்கு அழைத்துச் செல்வதே தமது நோக்கம் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here