யாழ். வல்வெட்டித்துறையில் ஆணொருவரின் சடலம் மீட்பு

Date:

யாழ்ப்பாணம், வடமராட்சி – வல்வெட்டித்துறை, ஆதி கோவிலடிப் பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

அதே இடத்தைச் சேர்ந்த இராமநாதன் தங்கநாதன் (வயது – 63) என்பவரே நேற்று (16) காலை இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

வீட்டில் இரவு படுக்கையில் இருந்து அவரைக் காலையில் காணாத நிலையில் தேடியபோது வீட்டின் பின்புறம் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாகக் காணப்பட்டார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் வல்வெட்டித்துறை பொலிஸாசாருக்குத் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்துக்குச் சென்ற பருத்தித்துறை மரண விசாரணை அதிகாரி சதானந்தன் சிவராஜா விசாரணை மேற்கொண்டார்.

சடலத்தை பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் ஒப்படைத்து பிரதே பரிசோதனை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு வல்வெட்டித்துறைப் பொலிஸாருக்கு மரண விசாரணை அதிகாரி உத்தரவிட்டார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

அனைத்து முஸ்லிம் பாடசாலைகளுக்கும் விசேட விடுமுறை

இலங்கையிலுள்ள அனைத்து முஸ்லிம் பாடசாலைகளுக்கும் எதிர்வரும் 27 ஆம் திகதி புதன்...

வெள்ள அபாய எச்சரிக்கை நீடிப்பு

அத்தனகலு ஓயாவைச் சூழவுள்ள பகுதிகளுக்கு விடுக்கப்பட்டிருந்த சிறியளவிலான வெள்ள அபாய எச்சரிக்கை...

உடனடியாக டொலர் அனுப்புமாறு அமைச்சர் கோரிக்கை

டொலரின் மதிப்பு இன்னும் உயரலாம் என எதிர்பார்த்து வெளிநாட்டு நாணயத்தை வைத்திருக்காமல்,...

200 மில்லிமீட்டருக்கும் அதிகமான மிக பலத்த மழை

இலங்கையில் தென்மேற்கு பருவப்பெயர்ச்சி காலநிலை படிப்படியாக நிலைபெற்று வருகின்றது.  நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில்...