உடனடியாக டொலர் அனுப்புமாறு அமைச்சர் கோரிக்கை

Date:

டொலரின் மதிப்பு இன்னும் உயரலாம் என எதிர்பார்த்து வெளிநாட்டு நாணயத்தை வைத்திருக்காமல், உடனடியாக இலங்கைக்கு அனுப்புமாறு வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களிடம் வர்த்தகம், வாணிபம், உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க கோரிக்கை விடுத்துள்ளார்.

சந்தையில் நிலவும் விசேட சூழ்நிலையை பயன்படுத்தி நுகர்வோரை சுரண்ட யாரேனும் முயற்சித்தால், அதற்கு எதிராக கட்டாயமாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

பொருளாதார நிலைமை குறித்து சிலர் தவறான விளக்கங்களை வழங்கி வருவதாகவும், அவற்றை திருத்த நேரம் செலவிட வேண்டிய அவசியமில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், சுற்றுலாத்துறையின் மூலம் கிடைக்கும் டொலர் வருவாய்களையும், ஏற்றுமதியாளர்கள் கையிருப்பில் வைத்துள்ள டொலர்களையும் ரூபாயாக மாற்றுமாறு அரசாங்கம் கேட்டுக்கொள்வதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

இவ்வாறு செய்யாவிட்டால், இந்த பிரச்சினையின் பாதிப்பை அவர்களே எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்படும் என்றும் வசந்த சமரசிங்க வலியுறுத்தினார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

வெள்ள அபாய எச்சரிக்கை நீடிப்பு

அத்தனகலு ஓயாவைச் சூழவுள்ள பகுதிகளுக்கு விடுக்கப்பட்டிருந்த சிறியளவிலான வெள்ள அபாய எச்சரிக்கை...

200 மில்லிமீட்டருக்கும் அதிகமான மிக பலத்த மழை

இலங்கையில் தென்மேற்கு பருவப்பெயர்ச்சி காலநிலை படிப்படியாக நிலைபெற்று வருகின்றது.  நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில்...

சஜித் தலைமையில் அவசர கூட்டம்!

எதிர்க்கட்சியைச் சேர்ந்த அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளின் விசேட கூட்டம் நேற்று (21)...

களு கங்கை ஆற்றைச் சுற்றி வெள்ள நிலை

இன்னும் சில மணி நேரங்களுக்குள் களு கங்கை ஆற்றைச் சுற்றிய பகுதிகளில்...