எதிர்க்கட்சியைச் சேர்ந்த அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளின் விசேட கூட்டம் நேற்று (21) இரவு கொழும்பில் உள்ள எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் நடைபெற்றுள்ளது.
ரூபாயின் பெறுமதி வேகமாக வீழ்ச்சியடைதல், வாழ்க்கைச் செலவு அதிகரித்தல் மற்றும் பொருளாதார அநிச்சய நிலை தீவிரமடைதல் உள்ளிட்ட விடயங்கள் குறித்து கலந்துரையாடுவதற்காக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் இந்தக் கூட்டம் அழைக்கப்பட்டிருந்தது.
இதன்படி, இந்தப் பிரச்சினைகள் மேலும் மோசமடைவதற்கு முன்பு விரைவான தேசிய தீர்வுகளை உருவாக்கும் நோக்கில் உடனடியாக அனைத்து கட்சிகளையும் இணைக்கும் மாநாட்டை கூட்டுமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுப்பதற்கு எதிர்க்கட்சித் தலைவர்கள் இக்கூட்டத்தில் தீர்மானித்துள்ளனர்.
