நீதி கேட்டு சுற்றுச்சூழல் அமைப்புகள் போராட்டம்

0
226

சுற்றாடல் அமைப்புகளின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இன்று (18) கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக “நீதிக்கு இடையூறு’ என்ற பெயரில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

கடந்த காலங்களில் காட்டு யானைகள் கொல்லப்பட்டதன் காரணமாக குறித்த விலங்குகளின் வாழ்வு சுதந்திரம் தெரிந்தே பறிக்கப்படுவதாக சுற்றாடல் அமைப்புக்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

வன விலங்குகளின் பாதுகாப்பில் தலையிட வேண்டிய வனம் மற்றும் வனவிலங்கு துறையும் தன் பங்கை மறந்துவிட்டதாக அவர்கள் குற்றம் சாட்டினர்.

இதன்படி, காட்டு யானைகளின் வாழும் உரிமையை உடனடியாக உறுதிப்படுத்த வேண்டும் என பொறுப்பு வாய்ந்த தரப்பினரிடம் வலியுறுத்தப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் தொழிற்சங்கங்கள் உட்பட சிவில் சமூக ஆர்வலர்களும் கலந்து கொண்டனர்.

புகைப்படங்கள் – அஜித் செனவிரத்ன

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here