தேர்தல் முறை மறுசீரமைப்புக்கு முன்மொழிவுகளை வழங்க ஒன்பது பேர் கொண்ட குழு; வெளியானது வர்த்தானி

0
149

அரசாங்கத்தின் உத்தேச தேர்தல் முறை மறுசீரமைப்புக்கான முன்மொழிவுகளைத் தயாரிப்பதற்காக முன்னாள் பிரதம நீதியரசர் பிரியசாத் டெப் தலைமையில் 9 பேர் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

குறித்த குழுவை நியமித்துள்ளமைக்கான விசேட வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வெளியிட்டுள்ளார்.

பாராளுமன்றத் தேர்தல் முறையில் மாற்றங்களை மேற்கொள்ள விசேட யோசனையொன்றை நீதி அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஸ அண்மையில் அமைச்சரவைக் கூட்டத்தில் சமர்ப்பித்திருந்ததுடன், இந்த யோசனை தொடர்பிலான விடயங்களை ஆராய விசேட குழுவொன்றை ஸ்தாபிக்கவும் அரசாங்கம் தீர்மானித்திருந்தது.

அதன் பிரகாரம் ஜனாதிபதி இந்த விசேட குழுவை நியமித்துள்ளார்.

இதேவேளை, தேர்தல்முறை மறுசீரமைப்பு தொடர்பில் இன்று நடைபெறும் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் விசேட கலந்துரையாடல் நடைபெற உள்ளதாக பிரதமர் தெரிவித்திருந்தார்.

இதேவேளை, அரசாங்கத்தின் இந்த யோசனைக்கு எதிர்க்கட்சி கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளதுடன், இதற்காக அமைக்கப்படும் எந்தவொரு குழுவிலும் பங்குபற்ற மாட்டோம் எனவுட் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இன்று பாராளுமன்றில் தெரிவித்திருந்தார் என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here