பிறந்து 45 நாட்களேயான குழந்தை திடீர் உயிரிழப்பு

Date:

யாழ்ப்பாணத்தில் பிறந்த 45 நாட்களேயான பெண் குழந்தை ஒன்று திடீரென உயிரிழந்துள்ளது.

கொடிகாமம், தவசிகுளம் பகுதியைச் சேர்ந்த துசியந்தன் தனுசியா என்ற குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

கடந்த 16 ஆம் திகதி குழந்தைக்கு உடல் சுகயீனம் ஏற்பட்டது. அதையடுத்து குழந்தையை சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்குப் பெற்றோர் கொண்டு சென்றனர்.

பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக குழந்தை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டது.

அங்கு குழந்தை சிகிச்சை பலனின்றி நேற்றுமுன்தினம் மாலை உயிரிழந்தது.

குழந்தையின் சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிரேம்குமார் மேற்கொண்டார்.

குழந்தையின் இறப்புக்கான காரணம் கண்டுபிடிக்கப்படாத நிலையில், உடற்கூற்று மாதிரிகள் கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

மழை தொடரும்

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

சங்கீத்சன் பிணையில் விடுதலை

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சொல்லிசை பாடகர்...

4 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

நாட்டில் 4 மாவட்டங்களுக்கு முதற்கட்ட மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்று (12) முற்பகல்...

அரசாங்கம் நீதிமன்ற நியமனங்களை தாமதப்படுத்துவதாக குற்றச்சாட்டு

உச்ச நீதிமன்றத்தில் தற்போது 4 நீதிபதி பதவிகள் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில்...