ஜனாதிபதி ரணில் மற்றும் சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் இடையே சந்திப்பு

Date:


சீனாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அந்த நாட்டு ஜனாதிபதி ஷி ஜின்பிங்கை (Xi Jinping) சந்தித்துள்ளார்.

இந்த சந்திப்பு பெய்ஜிங்கில் இன்று காலை இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
சீனாவில் இடம்பெற்றுவரும் சர்வதேச ஒத்துழைப்புக்கான மூன்றாவது Belt and Road மாநாட்டில் பங்கேற்றப்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கடந்த 15 ஆம் திகதி இரவு நாட்டிலிருந்து புறப்பட்டார்.

இதன்படி, ஜனாதிபதியின் சீன விஜயம் இன்றுடன் நிறைவடையுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, சீன துணைப்பிரதமர் Ding Xuexiang, சீன நிதி அமைச்சர் Liu Kun மற்றும் ஜனாதிபதி இடையிலான சந்திப்பு நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளது.
இலங்கையின் கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகள், அபிவிருத்தி திட்டங்கள் மற்றும் இலங்கை – சீனா இடையிலான பல்வேறு துறைசார் உறவுகளை வலுப்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

புதிய தேர்தல் ஆணையாளர் நாயகம்

புதிய தேர்தல் ஆணையாளர் நாயகமாக ரசிக பீரிஸ் இன்று (14) முதல்...

இந்த வரவு செலவு திட்டத்தை தோண்டத் தோண்ட தங்கம் வரும்

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தாக்கல் செய்த 2026 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்,...

இராணுவப் பயன்பாட்டில் உள்ள தனியார் காணிகளை விடுவிக்க நடவடிக்கை

யாழ்ப்பாணம் பலாலி பகுதிகளில் தற்போது இராணுவப் பயன்பாட்டில் உள்ள தனியார் காணிகளை...

இலங்கைக்கு பாம்பு, ஆமை கடத்தும் மர்ம கும்பல்

சென்னையை மையமாக வைத்து, வெளிநாடுகளில் இருந்து அரியவகை உயிரினங்கள் கடத்தப்பட்டு, அவை...