முதலீட்டுக்கு உகந்த சூழல் உருவாக்கப்பட்டு பொருளாதார ஸ்திரத்தன்மை விரைவில் ஏற்படுத்தப்படும் – ஜனாதிபதி

0
78

முதலீட்டுக்கு உகந்த சூழல் உருவாக்கப்பட்டு பொருளாதார ஸ்திரத்தன்மை விரைவில் ஏற்படுத்தப்படும் என நேற்று (20) முற்பகல் ஹெவ்லொக் சிட்டி, மிரேகா டவர் சப்பு மற்றும் அலுவலக வளாகம் (மிரேகா டவர்) திறப்பு விழாவில் கலந்து கொண்ட போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.

முதலீடுகளுக்காக பெரிய கொழும்பு பொருளாதார ஆணைக்குழுவினால் அறிமுகப்படுத்தப்பட்ட சட்ட முறைமை மீண்டும் செயற்படுத்தப்பட்டு, தற்போதுள்ள செயற்றிறன் அற்ற செயற்பாடுகளுக்குப் பதிலாக செயற்திறன்மிக்க சட்ட முறைமை அறிமுகப்படுத்தப்படும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்

அங்கு மேலும் கருத்து தெரிவித்த ரணில் விக்கிரமசிங்க மேலும் கூறியதாவது:

“இந்த ஹேவ்லாக் சிட்டி வளாகம் எஸ்.பி. தாவோவிற்கும் அவர் இலங்கைக்கான தியாகத்திற்கும் அஞ்சலி செலுத்தும் வகையில் கட்டப்பட்டது. நான் பிரதமரான பிறகு 1994 இல் தாவோவை முதன்முதலில் சந்தித்தேன். அப்போது அவர் உலக வர்த்தக மையத்தின் கட்டுமானப் பணியைத் தொடங்கினார். முன்னாள் ஜனாதிபதி ஆர். பிரேமதாச இறந்த பிறகு சிறிசேன குரே அவரை என்னைச் சந்திக்க அழைத்து வந்தார். அதன் பிறகு பல சந்தர்ப்பங்களில் தாவோவை சந்தித்தேன். அவரை மட்டுமல்ல அவரது மகள் மில்ரெட் தாவோவையும் சந்திக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.

அவர்களின் அர்ப்பணிப்பு பெரியது. ஏனெனில் விடுதலைப் புலிகள் தாக்குதல் நடந்த போது உலக வர்த்தக மையத் திட்டத்தில் இருந்து விலகிக் கொள்வார்கள் என்று பலர் நினைத்தார்கள். இதுபற்றி நான் தாவோவிடம் கேட்டபோது, ​​தாம் தொடர்ந்தும் இலங்கையில் தங்கியிருப்பேன் எனத் தெரிவித்தார். எனவே, இலங்கையின் எதிர்காலத்தில் அவர் கொண்டுள்ள நம்பிக்கைக்கு நான் அவருக்கு நன்றி கூறுகின்றேன்.

2003ல் நான் மீண்டும் பிரதமரான பிறகு தாவோ என்னைச் சந்தித்தார். அவர் ஒரு புதிய திட்டத்தை தொடங்க விரும்பினார்.அது தான் இந்த இந்த ஹேவ்லாக் சிட்டி வளாகம் ” ரணில் தெரிவித்தார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here