இந்திய இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டவர்களுக்கு களுவாஞ்சிக்குடியில் நினைவு தினம்

0
156

மட்டக்களப்பு- களுவாஞ்சிக்குடி பகுதியில் இந்திய இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்ட 11 பேரின் 36 ஆவது நினைவு தினம் இன்று அனுஷ்டிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் கலந்துகொண்டு உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்.

இந்நிகழ்வில் உரையாற்றிய இரா.சாணக்கியன்,

“களுவாஞ்சிக்குடியில் 1987ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 23 ஆம் திகதி இந்திய இராணுவத்தினரால் 11 பேர் படுகொலை செய்யப்ட்டனர். படுகொலை செய்யப்பட்ட மக்களுக்கு இன்றுவரை நீதி கிடைக்காத சூழ்நிலையில் தொடர்ந்தும் நீதியை கோரி மக்கள் போராடி வருகின்றனர்.

உயிரிழந்த அப்பாவி மக்களுக்கு நீதி கிடைக்கும் வரையில் தாங்கள் ஓயப்போவதில்லை. நீதிக்கான போராட்டங்கள் தொடர்ந்துக்கொண்டு தான் இருக்கும் என்பதை இன்றைய நாளில் தெரிவிக்கின்றேன்” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here