இந்திய இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டவர்களுக்கு நினைவேந்தல்

0
134

இந்திய இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்ட 50 க்கும் மேற்பட்ட பொதுமக்களின் நினைவேந்தல் நேற்றையதினம் கொக்குவில் இந்துக் கல்லூரிக்கு முன்பாக அனுஷ்டிக்கப்பட்டது.

கடந்த 1987 ஆம் ஆண்டு ஒக்டோபர் 24ம் திகதி யாழ்ப்பாணம், கொக்குவில் இந்துக்கல்லூரியில் இந்திய இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்ட 50 க்கும் மேற்பட்ட பொதுமக்களின் நினைவேந்தல் கொக்குவில் இந்துக் கல்லூரிக்கு முன்பாக இடம்பெற்றது.

குறித்த நிகழ்வில் படுகொலை செய்யப்பட்ட உறவுகளுக்கு தீபமேற்றி மலரஞ்சலி செலுத்தப்பட்டது

இந்நிகழ்வில் படுகொலை செய்யப்பட்டோரின் உறவினர்கள், பொதுமக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here