மட்டக்களப்பு நீதிமன்ற வளாகத்தில் விசேட பாதுகாப்பு

Date:

மட்டக்களப்பு நீதிமன்ற வளாகத்தை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தப்படலாம் என பதிவுத் தபாலில் அனுப்பப்பட்ட இரண்டு கடிதங்களின் அடிப்படையில் மட்டக்களப்பு பொலிஸாரும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரும் இன்று (25) வளாகத்தில் விசேட சோதனையினை மேற்கொண்டுள்ளனர்.

ஒக்டோபர் 24, 25 அல்லது 28 ஆகிய மூன்று நாட்களில் ஏதாவது ஒன்றில் மட்டக்களப்பு நீதிமன்ற வளாகத்தின் மீது தாக்குதல் நடத்தப்படலாம் என குறித்த கடிதங்கள் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த வளாகத்தில் சந்தேகத்திற்கிடமான எதுவும் கண்டு பிடிக்கப்படவில்லை எனவும் குறித்த கடிதங்கள் மட்டக்களப்பு தபால் நிலையத்தில் இருந்து பதிவுத் தபாலுக்கு அனுப்பப்பட்டவை எனவும், கடிதங்களை அனுப்பிய தரப்பினர் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு நீதிமன்ற வளாகத்தின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்த இரண்டு பொலிஸ் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

மேலும் ஒரு பணப்பரிமாற்ற மோசடி அம்பலம்!

ஐக்கிய அரபு அமீரகத்தில் (UAE) உள்ள நிறுவனம் ஒன்றிற்கு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்...

பெருந்தோட்ட வன்தாக்குதல் புதனன்று பல்தரப்பு மாநாடு – மனோவின் முயற்சிக்கு வெற்றி

பெருந்தோட்ட வாழ் மக்கள் மீது அதிகரித்து வரும் வன்முறைகளை எதிர்கொள்ள, சகல...

வாகன இறக்குமதி வரி 50% உயர்வு

இலங்கையில் தெரிவுசெய்யப்பட்ட சில மோட்டார் வாகனங்களின் இறக்குமதிக்கு விதிக்கப்படும் சுங்க இறக்குமதி...

கண்டி சம்பவம் குறித்து சம்பத் வங்கி விசேட அறிக்கை!

கண்டி தலதா வீதியில் அமைந்துள்ள அதன் கிளை மற்றும் அங்குள்ள அதிகாரிகள்...