இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் தலைவர் ஜஸ்வர் உமார் மற்றும் உதைபந்தாட்ட சம்மேளனத்தின் செயலாளர் உபாலி ஹெவகே ஆகியோர் தாக்கல் செய்த வழக்கு இன்று (ஒக்டோபர் 26, 2022) மேன்முறையீட்டு நீதிமன்றத்தில், பரசீலிக்கப்பட்டது.
விளையாட்டுத்துறை அமைச்சர் சார்பில் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரையை மனுதாரர் தரப்பான நாங்கள் ஏற்றுக்கொண்டோம்.
அதன்படி, 69 நாட்களில் கால்பந்தாட்ட சம்மேளன தேர்தல் நடத்தப்பட்டு, இன்றிலிருந்து சரியாக 14 நாட்களுக்குள் விசேட பொதுக்கூட்டத்தைக் கூட்டி, தேர்தல் குழு ஒன்று நியமிக்கப்பட உள்ளது.
மனுதாரர் சார்பில் சட்டத்தரணி எராஜ் டி சில்வா, தமிந்த விஜேரத்ன சுல் லுதுபி மற்றும் திமுத்து குருப்புஆராச்சி ஆகியோர் ஆஜரானார்கள்.
கால்பந்தாட்ட தேர்தலை விரைவில் நடத்துமாறு கோரி 40 கால்ப்பந்தாட்ட லீக்குகள் இடையீட்டு தரப்பாக இந்த வழக்கில் இணைந்துள்ளன.