சட்டக் கல்லூரி பரீட்சையில் பார்த்து எழுதி சிக்கிய புத்திக எம்பி!

0
129

தற்போது இரண்டாம் ஆண்டு சட்டக்கல்லூரி பரீட்சைக்கு தோற்றியுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரன, பரீட்சையில் பார்த்து எழுதும் போது பரீட்சார்த்தி ஒருவரிடம் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பரீட்சை எழுதும் போது அவர் பார்த்து எழுதுவதைக் கண்ட பரீட்சார்த்தி ஒருவர் அதனை அவதானித்து அவர் நகல் எடுத்ததை உறுதிப்படுத்திய பின்னர் மண்டபத் தலைவரிடம் முறைப்பாடு செய்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

அவரிடம் சில விடைத்தாள்கள் சிக்கியதாக கூறப்படுகிறது. பரீட்சை திணைக்களத்தினால் பரீட்சை நடத்தப்படுவதுடன், கடுமையான நிபந்தனைகளின் பின்னணியிலேயே புத்திக பத்திரன எம்.பி இவ்வாறு நடந்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும், இந்த சம்பவத்தை மூடிமறைக்க எதிர்க்கட்சிகளும் உயர்மட்டத்தில் தலையிட்டுள்ளதாகவும், அவ்வாறான சம்பவம் நடக்கவில்லை என்பதை நிரூபிக்குமாறு சம்பந்தப்பட்ட பரீட்சார்த்திக்கு அழுத்தம் கொடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

குறிப்பு – இந்த விடயம் தொடர்பில்புத்திக பத்திரன பதில் அளிக்க வேண்டும் என்றால் அதற்கான இடத்தை வழங்குவதற்கு தயாராக உள்ளோம் என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கின்றோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here